குறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

admin January 21, 2017 0

குறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று (20) ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் , உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்திளால் இந்த நெடுந்தாரகை பயணிகள் படகு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை இன்று காலை ஆரம்பம்..!

யாழ்.நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்து சேவைக்காக புதிதாக அமைக்கப்பட்ட “நெடுந்தாரகை” பயணிகள் படகு இன்றைய தினம் காலை புங்குடுதீவு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவுக்கான வெள்ளோட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் மாகாண உள்ளூராட்சி அமைச்சரும் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்விஜயகலா மகேஸ்வரன், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசன் ஆகியோரும் மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

7211-1-e62a300a65d6f368dfcd8e6f4e511553 7211-3-e62a300a65d6f368dfcd8e6f4e511553 7211-8-e62a300a65d6f368dfcd8e6f4e511553

551 Total Views 1 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)