2020ஐ இலக்கு வைத்து காய்நகர்த்தல்! மீண்டும் மைத்திரி வருவாரா?

admin June 25, 2016 0

சிறிலங்காவின் சமகால ஜனாதிபதி சர்வதேச ரீதியாக பிரபல்யம் வாய்ந்தவராகவும் அதிகம் பேசப்படும் நபராகவும் மாறியுள்ளார்.

இந்நிலையில் 2020ம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் மைத்திரிபால போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போதே ஆரம்பித்துள்ளன.

அண்மையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் மைத்திரி போட்டியிட வேண்டும் என அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திர கட்சியினால் நியமிக்க கூடிய சிறந்த வேட்பாளராக சமகால ஜனாதிபதி திகழ்வதாக நிமல் சிறிபால தெரிவித்துள்ளார்.

20ஆம் அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இதன் போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்வைத்த வாக்குறுதிக்கு அமைய, மற்றுமொரு தடவை ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடப் போவதில்லை என மைத்திரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறை மாற்றம் மற்றும் ஜனாதிபதி முறைமை திருத்தம் செய்தவது தொடர்பில் விரைவில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

671 Total Views 2 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)