ஒரு வாரத்துக்கு பின் – இயல்புக்கு திரும்பிய பரிஸ்..!

admin June 6, 2016 0

கடந்த ஒரு வார போராட்டத்துக்கு பின் பரிஸ் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறது. தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக பரிஸ் தீவுபோல் வெள்ளத்தில் மிதந்தது! பிரான்ஸ் முழுவதும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மின்சாரம், போக்குவரத்து தடைப்பட்டும், உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டும் பலத்த சிக்கல்களை பிரான்ஸ் சந்தித்திருந்தது.

பரிசுக்குள் வேகமாக உயர்ந்த சென் நதியின் நீர்மட்டம் பரிஸ் நகர மக்களை அச்சத்துக்குள்ளாக்கியது. லுவர் அருங்காட்சியத்தில் இருந்து பெறுமதி மிக்க பொருட்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தன. பல தொடருந்து நிலையங்களும் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பிரச்சனைகள் ஓரளவுக்கு தீர்ந்து பரிஸ் நகரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. லூவர் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், தொடருந்து சேவைகள். குறிப்பாக RER C சேவைகள் இன்றுமுதல் வழமைபோல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. தற்போது மின்சாரம் வழங்குவதற்குரிய வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19,000 வீடுகள் பாதிக்கப்பட்டிருந்தமையும், நேற்று மாலை அது 11,000 வீடுகளாக குறைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மீதமான மின்சார வழங்கல்கள் துரிதமாக செயல்படுத்தப்படும் என கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

790 Total Views 1 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)