இலங்கையில் பாதுகாப்பான Viber சேவை! உலகளாவிய ரீதியில் ஐந்தாமிடம்!!

admin May 21, 2016 0

உலகம் முழுவதும் வாழும் 711 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொடர்பாடல் மென்பொருளாக Viber செயலியை பயன்படுத்துகின்றனர்.

இலங்கைத் தீவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் Viber தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இதனூடாக வைபர் ஸ்டிக்கர் (Viber Stickers) எனும் உணர்வு பரிமாற்றங்களை வெளிப்படுத்துவதில் இலங்கைக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.

கடந்த 18 மாதங்களில் இலங்கையில் Viberயை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் பெரிய சந்தை காணப்படுவதாக வைபர் நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் அனுபவ் நய்யர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 14 வயது முதல் 35 வயது வரையிலான நபர்கள் அல்லது 40 வயது வரையிலான நபர்கள் மத்தியில் Viber Stickers அதிகம் பிரபல்யமடைந்துள்ளது.

தொலைபேசி பாவனையாளர்கள் தமக்கு தோன்றும் எண்ணங்கள் வெளிப்படுத்துவதற்கு Viber Stickers பயன்படுத்தப்படுகின்றது. Viber Stickers அதிகம் பயன்படுத்தும் சிறந்த சந்தைகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம் கிடைத்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளின் Viber Stickers பயன்பாட்டை விடவும் இலங்கையில் அதிகம் பிரபலமடைந்துள்ளது. தற்போது வரையில் சிங்கள, தமிழ் மொழிகளில் உட்பட Viber Stickers வடிவமைக்கப்பட்டுள்ளமை இதற்கான காரணம் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Viber மிகவும் பாதுகாப்பான ஒரு தொடர்பாடல் சாதனமாகும். பயன்பாட்டாளர்களின் தரவுகள் மிகவும் பாதுகாப்பட்டுள்ளது. வேறு ஒருவரினாலும் நுழைய முடியாத வகையில் தரவுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. வைபர் தரவுகளை பாதுகாக்கும் வசதி இலங்களை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. விரைவில் இந்த திட்டம் இலங்கை மக்களுக்கும் அறிமுகப்படுத்தி கொடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 52 வார காலப்பகுதியில் பார்க்கும் போது இலங்கையில் பைவருக்கு முதலிடம் கிடைத்திருந்துள்ளது. அத்துடன் இலங்கையில் வைபர் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

481 Total Views 1 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)