பிரான்ஸ் மருத்துவர்கள் குடியேற்றவாசிகளிடம் கப்பம் பெறுவதாக குற்றச்சாட்டு

admin May 17, 2016 0

குடியிருப்பு அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு தேவையான மருத்துவச் சான்றிதழைகளை வழங்க பிரான்ஸில் பெருந்தொகை பணம் அறவிடப்படுவதாக குடியேற்றவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மருத்துவச் சான்றிதழை வழங்க குடியேற்றவாசிகளிடம் சட்டவிரோதமாக மருத்துவர்கள் பெருந்தொகை பணத்தை அறவிட்டமைக்கான பல சாட்சியங்கள் இருப்பதாக குடியேற்றவாசிகளின் உரிமைகளுக்காக செயற்பட்டு வரும் பிரான்ஸ் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

இது சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் பாரிஸ் நகரில் இயங்கும் வைத்தியசாலை ஒன்றின் மருத்துவர் கடந்த செவ்வாய் கிழமை முதல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவமானது ஒரு தனித்த சம்பவம் அல்ல என குடியேற்றவாசிகளுக்காக செயற்படும் அரசசார்பற்ற நிறுவனம் கூறியுள்ளது.

சுகாதார திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்படி மருத்துவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசசார்பற்ற நிறுவனத்தை சேர்ந்த லாவூரா பீட்டர்செல் என்பவர் கூறியுள்ளார்.

பல மருத்துவர்கள் குடியேற்றவாசிகளிடம் கப்பம் பெற்றுள்ளதை தமது நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குடியிருப்பு அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக வழங்கும் மருத்துவச் சான்றிதழ்களை பெற்றுக்கொடுக்க பல நூறு யூரோக்கள் குடியேற்றவாசிகளிடம் இருந்து அறவிடப்படுகின்றன எனவும் பீட்டர் செல் மேலும் தெரிவித்துள்ளார்.

643 Total Views 2 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)