தொண்டமனாறு கடற்பகுதியில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்.

admin April 30, 2016 0

யாழ்ப்பாணம் தொண்டமனாறு கடற்பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை இந்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை கடலுக்கு சென்ற சிலர் கடலில் சடலமொன்று மிதந்து வருவதை அவதானித்ததையடுத்து உடனடியாக அது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் கிடைக்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டிருந்தனர். எனினும் மீட்கப்பட்ட சடலமானது யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2087-1-f4fbcaf1a5184b88feca859998dbb2f8 2087-2-f4fbcaf1a5184b88feca859998dbb2f8

384 Total Views 2 Views Today
Please follow and like us:
0

Write a Reply or Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com

Enjoy this blog? Please spread the word :)